முஸ்லிம் காங்கிரஸ் சாய்ந்தமருது மத்திய குழுவின் விசேட கூட்டம்…

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருது மத்திய செயற்குழுவின் விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று புதன்கிழமை இரவு கட்சியின் தவிசாளரும் முன்னாள் வடக்கு- கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.அப்துல் மஜீட் அவர்களின் இல்லத்தில், கட்சியின் சாய்ந்தமருது பிரதேச அமைப்பாளர் எம்.ஐ.எம்.பிர்தௌஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை மையமாகக் கொண்டு கருத்துப் பரிமாறல்கள் இடம்பெற்றது. இதன்போது பல முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டதுடன் அவற்றை கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதெனவும் முடிவு செய்யப்பட்டது.

இக்கலந்துரையாடலில் கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீல், கட்சியின் உயர்பீட உறுப்பினரும் சாய்ந்தமருது மத்திய செயற்குழுவின் செயலாளருமான ஏ.ஜலால்டீன், கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்களான ஏ.ஏ.வஸீர், ஏ.நிஸார்டீன், ஏ.சி.சமால்டீன், சாய்ந்தமருது மத்திய செயற்குழுவின் உதவிச் செயலாளர் எம்.எம்.எம்.றபீக், மற்றும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களான ஜப்பார் மௌலவி, எஸ்.எச்.எம்.பிர்தௌஸ், எம்.எச்.எம்.முபாறக் உட்பட மற்றும் பல முன்னணி போராளிகளும் கலந்து கொண்டனர்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.