ஹெரொயின் போதைப் பொருளை வைத்திருந்த முதியவர் ஒருவர் விளக்கமறியலில்…

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 240 மில்லிகிராம் ஹெரொயின் போதைப் பொருளை வைத்திருந்த முதியவர் ஒருவர் விளக்கமறியலில்
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 240 மில்லிகிராம் ஹெரொயின் போதைப் பொருளை வைத்திருந்த முதியவர் ஒருவரை இம்மாதம் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க இன்று(2) உத்தரவிட்டார்.
சமூத்திராகம,திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் சமூத்திராகம பகுதியிலுள்ள வீட்டில் வைத்தே 240 மில்லி கிராம் ஹேரொயின் போதைப் பொருளுடன் கைது செய்துள்ளதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரான முதியவர் தொடர்பாக போதைப்பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வீட்டில் வைத்து ஹேரொயினுடன் கைது செய்துள்ளதாகவும்,ஹேரொயின் போதைப்பொருள்வைத்திருந்தமை,விற்பனை செய்தமை போன்ற வழக்குகள் ஏற்கனவே குறித்த சந்தேக நபரான முதியவருக்கெதிராக திருகோணமலை நீதிமன்றில் நடைபெற்று வருவதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.