91 பேருடன் நான்கு விமானங்கள் வந்திறங்கின கட்டுநாயக்கவில்…

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் காரணமாக இலங்கைக்கு வர முடியாமல், மூன்று நாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 91 பேரை ஏற்றிய 04 விசேட விமானங்கள் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தன.

கட்டாரின் டோஹா நகரிலிருந்து முதல் விமானம் நாட்டை வந்தடைந்தது. அதில் 21 இலங்கையர்கள் வந்தனர்.

இதனைத் தொடர்ந்து மாலைதீவில் சிக்கியிருந்த இலங்கையர்களை ஏற்றிய 02 விமானங்கள் நாட்டை வந்தடைந்தன. இதில் முதல் விமானத்தில் 61 பேரும், இரண்டாவது விமானத்தில் 08 பேரும் வந்தனர்.

மற்றுமொருவர் தனி விமானத்தில் அபுதாபி நகரிலிருந்து நாட்டை வந்தடைந்தார்.

இவர்கள் அனைவரும், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.