2005இல் ரணில் ஜனாதிபதியாக ஆகியிருந்தால் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைத்திருக்கும்! – தும்பளையில் கூறினார் விஜயகலா…

“2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றிருந்தால் தமிழ் மக்களுக்குத் தீர்வு கிடைத்திருக்கும். முள்ளிவாய்க்காலில் ஒன்றரை இலட்சம் மக்கள் இனப் படுகொலை செய்யப்பட்டிருக்க மாட்டார்கள்.”

– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாணம் மாவட்ட முதன்மை வேட்பாளர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

தும்பளையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“வடக்கு, கிழக்கு அதிகளவான அபிவிருத்திகளை நல்லாட்சி அரசே முன்னெடுத்தது. இளையோருக்கான வேலை வாய்ப்புக்களை நல்லாட்சி அரசே வழங்கியது. தற்போதைய ஆட்சியில் இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று விவரங்களைச் சேகரிக்கின்றார்கள். எதற்காக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது?

எமது ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட செயற்றிட்ட உதவியாளர் நியமனத்தை பழிவாங்கும் முகமாக இந்த அரசு இடைநிறுத்தியுள்ளது. ஆனால், ஒரு லட்சம் இளையோருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாகக் கூறி இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்ற விவரங்களைத் திரட்டுகின்றனர்.

இந்த அரசு தமது வாக்கு வங்கிக்காக பாரபட்சமாகச் செயற்படுகின்றது. கட்சி பேதமின்றி விகிதாசர அடிப்படையில் இளையோர் வேலைவாய்ப்பை வழங்க முன்வரவேண்டும்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.