இலங்கையில் மேலும் ஆறு பேருக்கு கொரோனா தொற்று!

கட்டாரில் இருந்து வருகை தந்த மேலும் 05 பேருக்கும் மற்றும் இந்தியாவில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இந்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2060 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இன்றைய தினம் மேலும் 79 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 1827 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்