போதையற்ற நாட்டை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில் துண்டுப்பிரசுரம் விநியோகம்

பாறுக் ஷிஹான்
 

 போதையற்ற நாட்டை உருவாக்குவோம்  என்ற தொனிப்பொருளில்  ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய சர்வதேச போதை ஒழிப்பு வாரமாக 2020 ஜூன் 20 தொடக்கம் 2020 ஜூலை 2 ம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது .

இது தொனிப்பொருளுக்கு அமைய இலங்கை மதுவரி திணைக்கள் ஆணையாளர் நாயகத்தின் கட்டளைக்கு இணங்க  மதுவரி திணைக்களம்  பல்வேறு  வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளதுடன்இதனை முன்னிட்டு விசேட சுற்றி வளைப்புக்களும் விசேட வேலைத்திட்டங்களும்  நாடளாவிய ரீதியில் இடம்பெற்று  வருகின்றது.

இதற்கமைய அம்பாறை மாவட்டத்தில்  கல்முனை மதுவரிநிலையமும் கடந்த 4 நாட்களாக  இவ்வாரத்தை முன்னிட்டு பொதுமக்களை போதைப்பொருளில் இருந்து பாதுகாப்பதற்காக விழிப்பூட்டல் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தனர்.

இதற்கமைய  இவ்வாரத்தின இறுதி நாளான இன்று(2)  கல்முனை பிராந்திய மதுவரி திணைக்களத்திற்கு உட்பட்ட கல்முனை சம்மாந்துறை அக்கரைப்பற்று பொது இடங்களில் இத்துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.

போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு   கிழக்கு மாகாண உதவி மதுவரி ஆணையாளர் க.தர்மசீலன் மற்றும்  அம்பாறை மாவட்ட மதுவரி அத்தியட்சகர் என்.சுசாதரன்   வழிகாட்டலில் கல்முனை மதுவரி நிலைய பொறுப்பதிகாரி பொ.செல்வகுமார் தலைமையில் சென்ற உத்தியோகத்தர்கள் இத்துண்டுப்பிரசுரங்களை வழங்கியதுடன் மக்களுக்கு போதைப்பொருள் தொடர்பில் தெளிவுபடுத்தினர்.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.