2 நாட்கள் போராட்டத்தைத் தொடர்ந்து பிரதமரைச் சந்திக்கும் துறைமுக தொழிற்சங்க பிரதிநிதிகள்

துறைமுக தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று தற்போது இடம்பெற்று வருகின்றது.

தங்காலையில் அமைந்துள்ள கார்ல்டன் இல்லத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்று வருகிறது.

கொழும்பு துறைமுக தொழிற்சங்க ஊழியர்கள் மூவர் 187 அடி உயரமான பழுதூக்கியின் மீது ஏறி நேற்று முன்தினம் முன்னெத்த கவனயீர்ப்பு போராட்டம் நேற்றும் 2ஆவது நாளாகவும் இடம்பெற்றது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்குவது தொடர்பான தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் பொருத்துவதற்காக சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட புதிய பழுதூக்கிகளை அங்கு உடனடியாக பொருத்துமாறு கோரியே அவர்கள் இவ்வாறான போராட்டத்தை மேற்கொண்டனர்.

இதனையடுத்து, இன்றைய தினம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கலந்துரையாடல் ஒன்றுக்கு இணக்கம் தெரிவித்திருந்த நிலையில் அவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்திக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.