மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் சேவைகள் வழமை திரும்பியது!

மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் – 19 வைரஸ் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலைமைகள் காரணமாக வரையறைகளுக்குட்பட்ட நிலையில் செயற்பட்டு வந்த திணைக்கள செயற்பாடுகளை நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்திற் கொண்டு  கடந்த புதன்கிழமையில் இருந்து இருந்து வழமை போன்று ஆரம்பித்துள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் எதிர்வரும் காலங்களில் தொலைபேசி ஊடாக நேரகாலத்துடன் திகதிகளை ஒதுக்கிக் கொள்ள வேண்டிய தேவை இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, அலுவலக வளாகத்திற்குள் வருகின்ற சேவை பெறுநர்கள் சுகாதார அறிவுறுத்தல்களுக்கமைய முகக் கவசங்களை அணிதல், கிருமித்தொற்று நீக்கம் மற்றும் சமூக இடைவெளிகளைப் பேணுதல் உட்பட அனைத்து சுகாதார ஆலோசனைகளையும் பின்பற்றுதல் வேண்டும் என்றும் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.