நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதி நிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் – மஹாலட்சுமி

எதிர்வரும்  நாடாளுமன்ற தேர்தலின் போது அரசியல் களத்தில் இருக்கின்ற அனைத்துப் பெண்களுக்கும் வாக்களியுங்கள் என மன்னார் மாதர் ஒன்றியத்தின் மாவட்ட இணைப்பாளர் மஹாலட்சுமி குருசாந்தன் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள மாதர் ஒன்றியத்தின் மாவட்ட அலுவலகத்தில்  இன்று   (வெள்ளிக்கிழமை) இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்த கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது இலங்கையில் ஜனநாயக அரசியல் என்று சொல்லப்படுகின்ற அரசியலில் பல்வேறு குறைபாடுகள் தாங்கிக் கொண்டு செல்வதை நாங்கள் அறிவோம்.

தற்போது அரசியல்  களத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றோம். இந்த கால கட்டத்தில் காலா காலமாக எங்களுடைய பெண்கள் அதாவது அரசியலில் ஈடுபடும் பெண்களை சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் உண்மைக்கு புறம்பான விமர்சனங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது.

ஆணுக்கு நிகராக பெண்கள் பல துறைகளில் வந்து குறிப்பாக தீர்மானம் எடுக்கும் துறைகளில் பெண்கள் ஈடுபட்டு கொண்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்திலே அரசியல் களத்திலே இருக்கின்ற பெண்கள் மாத்திரம் இவ்வாறு அவதூராக உண்மைக்கு புறம்பான கதைகளை சில சமூக வலைதளங்களில் பரப்பி   வருகின்றார்கள்.

இதனை பெண்கள் அமைப்பாகிய நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். இது தொடர்பாக ஒரு அறிக்கையை நாங்கள் வெளியிட்டுள்ளோம். குறித்த அறிக்கையில் இலங்கை பூராகவும் கடமையாற்றி வருகின்ற   32 அமைப்புகள் இணைந்து குறித்த அறிக்கையினை வெளியிட்ட இருக்கின்றோம்.

இந்த விடயம் மிகவும் கண்டிக்கத்தக்கது. எதிர் காலத்தில் இவ்வாறான சமூக வலைத்தளங்கள் அரசியலில் ஈடுபடுகின்ற பெண்களுக்கு வந்து ஆக்கமும் ஊக்கமும் அளித்து இவர்களுடைய பிரதி நிதித்துவத்தை  நாடாளுமன்றத்தில் அதிகரிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளுகின்றோம்.

அண்மைக் காலமாக இந்த பெண்கள் தொடர்பாக இருக்கின்ற அடி மட்டத்தில் இருக்கின்ற குறிப்பாக யுத்தத்திற்குப் பின்னர் அடி மட்டத்திலேயே இருக்கின்ற பெண்களது பிரச்சினைகள்   இன்று வரை அவர்களுக்கான தீர்வு ஏற்படாத நிலையினை நாங்கள் பார்க்கின்றோம்.

இந்த நிலைமை மாற வேண்டும் என்றால்  குறிப்பாக பெண்கள் அவர்களுடைய பிரச்சினைகளை கரிசனையுடன் பார்க்கும் பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும்.தீர்மானம் எடுக்கும் துறையில் வர வேண்டும்.

அப்போது தான் இவர்களுடைய பிரச்சனையை கரிசனையுடன் பார்த்து இவர்களுக்கான  பிரச்சனைகனின் தீர்வுகளுக்கான பொறிமுறைகளை உருவாக்கி தீர்வுகளை பெற்றுக் கொடுக்க முடியும்.

அந்த வகையில் எதிர்வரும் தேர்தலில் அரசியல் களத்தில் இருக்கின்ற அனைத்துப் பெண்களுக்கும் வாக்களியுங்கள். நாடாளுமன்றத்திலே பெண்களுடைய பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க நாங்கள் அனைவரும் இணைந்து ஒன்று சேர்ந்து உழைப்போம் என்று கேட்டுக்கொள்கின்றேன்” என  தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.