தெப்பம் ஒன்றில் யாழ்ப்பாணத்தை வந்தடைந்த இந்தியப் பிரஜை கைது!

இந்திய பிரஜை ஒருவர் தெப்பம் ஒன்றில் கடல்வழியாகப் பயணித்து யாழ்ப்பாணம் நெடுந்தீவுப் பகுதி கரையை வந்தடைந்துள்ளார்.

இவர், நேற்று மதியம் 12 மணியளவில் நெடுந்தீவின் தென்பகுதி கடற்கரையை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்ச சூழ்நிலை நிலவிவரும் நிலையில் குறித்த இந்தியப் பிரஜை இவ்வாறு வந்துமுள்ளமை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நெடுந்தீவில் வைத்து கைதுசெய்யப்பட்ட அவர் இன்று (வெள்ளிக்கிழமை) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.

இதையடுத்து குறித்த நபரை விடத்தல்பளையில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தடுத்து வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.