தனிமைப்படுத்தலை நிறைவுசெய்த மேலும் 152பேர் வீடுகளுக்கு திரும்பினர்

வவுனியா- வேளான்குளம், வன்னி விமானப்படை முகாமில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 152 பேர், தனிமைப்படுத்தலை நிறைவு செய்து இன்று (சனிக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

குறித்த 152 பேரும், பீ.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக  இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதில் அதிகமானோர், கொழும்பு, காலி, மட்டக்களப்பு மற்றும் கண்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

இதேவேளை, நாட்டில், நேற்று மட்டும் மேலும் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2,069 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.