இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று: 22 பேர் குணமடைவு!

இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், நாட்டில் மொத்தமாக தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 70 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் மேலும் 22 பேர் குணமடைந்து இன்று (சனிக்கிழமை) வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, இதுவரை தொற்றிலிருந்து ஆயிரத்து 885 பேர் குணமடைந்துள்ளதுடன் 174 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி 11 பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.