ஜிந்துப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 50 பேரின் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் வெளியாகின!

கொழும்பு, ஜிந்துப்பிட்டிய பகுதியில் இருந்து கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பப்பட்டவர்களில் 50 பேரின் பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன.

குறித்த முடிவுகளில் 50 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை எனவும், எனினும் அவர்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்கு கண்காணிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிந்துப்பிட்டியைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, அவரது குடும்பத்தை சேர்ந்த எட்டுபேரை சோதனைக்கு உட்படுத்தியதில், அவர்கள் எவருக்கும் கொரோனா தொற்று இல்லையென உறுதிப்படுத்தப்பட்டது.

எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தப் பகுதியில் வசிக்கும் 29 குடும்பங்களைச் சேர்ந்த 154 பேர் கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமில் தற்போது தனிமைப்படுத்தலில் உள்ள நிலையில் 50 பேரின் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.