பஹ்ரேனில் சிக்கியிருந்த 290 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்

பஹ்ரேன் நாட்டில் சிக்கியிருந்த 290 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும், ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.202 ரக விமானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இதேவேளை நேற்றைய தினம் டுபாயில் இருந்து 2 இலங்கையர்கள், எமிரேட்ஸ் விமானசேவைக்கு சொந்தமான விமானத்தில்  நாட்டிற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.

அதேபோன்று கட்டார்- தோஹாவில் இருந்தும் 15 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இவ்வாறு வருகை தந்துள்ள அனைவருக்கும் கட்டுநாயக்க விமான நிலையத்திலேயே பி.சீ.ஆர்.பரிசோதனைகள் நடத்தப்பட்டு, தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.