தொலைபேசியில் வீடியோ கேம் விளையாடியவர் மூளை நரம்பு வெடித்து உயிரிழப்பு

தொலைபேசியில் ஐந்து மணி நேரத்துக்கு மேல் வீடியோ கேம் விளையாடிய ஒருவர், மூளை நரம்பு வெடித்து உயிரிழந்த சம்பவம் கொழும்பில் பதிவாகியுள்ளது.

கொழும்பு- கிரான்ட்பாஸ் பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த 29 ஆம் திகதியே திடீர் மரணமடைந்திருந்தார். இந்நிலையில் இந்த திடீர் மரணம் தொடர்பாக மரண பரிசோதகர் இரேஷா தேஷானி விசாரணையை முன்னெடுத்திருந்தார்.

இதன்போதே  அவரது  மனைவி ஆனந்தன் தர்ஷிகா இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “எனக்கு தெரிந்தவரையும் அவருக்கு அல்சர்  வருத்தம் மாத்திரமே இருந்தது வேறு  எந்ததொரு நோயும் இருக்கவில்லை.

கடந்த 29ஆம் திகதி, இரவு 9  மணியளவில், கையடக்கத் தொலைபேசியில், எனது கணவன் கேம் விளையாடிகொண்டிருந்ததை அவதானித்தேன்.

எனவே அதனை நிறுத்தி விட்டு உறங்குமாறு கூறினேன். ஆனால் அதனை கேட்காமல் விளையாடிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில்  அடுத்த நாள் அதிகாலை இரண்டு மணியளவில் திடீரெனச் சத்தம் கேட்டு எழும்பிச் சென்று பார்த்தேன். அவர் மூக்கு மற்றும் வாயில் இரத்தம் வடிந்த நிலையில் கிடந்தார்.

அதனைத் தொடர்ந்து அவரை வைத்தியசாலையில் அனுமதித்தப்போது, உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் 5 மணி நேரத்துக்கும் மேலதிகமாக  தொலைபேசியை பயன்படுத்தியதன் காரணமாக அதிக இரத்த அழுத்தம் ஏற்பட்டு, மூளை நரம்பு வெடித்தமையினால் அவர் உயிரிழந்துள்ளார் எனவும் வைத்தியர்கள் குறிப்பிட்டனர்” என அவர் கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.