தீக்காயங்களுக்கு சிகிச்சை பெற்றுவந்த இளம் பெண் உயிரிழப்பு- வவுனியாவில் சம்பவம்

தீக்காயங்களுக்கு சிகிச்சை பெற்றுவந்த இளம் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் 29 வயதுடைய பெண்ணொருவரே நேற்று (சனிக்கிழமை) உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ளதாவது,  கடந்த மாதம் 8 ஆம் திகதி, வவுனியா-  ரம்பவெட்டி பகுதியில் வசித்து வந்த குடும்பம் ஒன்றுக்கும் அயல் குடும்பம் ஒன்றுக்கும் இடையில் வாய்தகராறு ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியுள்ளது.

குறித்த சம்பவத்தினை தொடர்ந்தே, இளம் பெண்ணாருவர் எரிந்த நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த மக்களினால் மீட்கப்பட்டு, வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இவ்வாறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண், 25 நாட்களுக்கு பின்னர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அத்துடன் சம்பவம் தொடர்பாக  பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்