யாழ்- நீர்வேலி பகுதியில் ஒருவர் கொலை

யாழ்ப்பாணம்- நீர்வேலி பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்ற தகராறில், ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் முதியவர் ஒருவரே கொல்லப்பட்டுள்ளார்.

நீர்வேலி வடக்கு பகுதியில் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம், கைகலப்பாக மாறியுள்ளது. இதன்போதே ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்