நல்லாட்சிக்கான தேசிய முண்ணனியின்(NFGG) கிண்ணியா நகர சபை உறுப்பினராக செயற்பட்டு வந்த உமர் அலி ரனீஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைவு…

நல்லாட்சிக்கான தேசிய முண்ணனியின்(NFGG) கிண்ணியா நகர சபை உறுப்பினராக செயற்பட்டு வந்த உமர் அலி ரனீஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துள்ளார்.
இவர் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரும் முன்னால் பிரதி அமைச்சரும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான அப்துல்லா மஃறூப் முன்னிலையில் அவர்களுடன் சனிக்கிழமை (4) மாலை  உத்தியோகபூர்வமாக தனது ஆதரவாளர்களுடன் இணைந்து கொண்டார்.
இவர் அப்துல்லா மஹ்ரூப்பின் வெற்றிக்காக பிரசாரப்பணிகளிலும் ஈடுபடவுள்ளார்.
குறித்த நிகழ்வு பெரியாற்று முனை பகுதியில் இடம் பெற்றது.
 இதில் முன்னால் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர்,கிண்ணியா நகர சபை உறுப்பினர்களான ஐயூப் நளீம் சப்ரீன் எம்.எம்.மஹ்தி, நிஸார்தீன் முஹம்மட், கிண்ணியா பிரதேச சபை உறுப்பினர் ஏ.ஆர்.எம்.அஸ்மி உள்ளிட்ட கட்சி ஆதரவாளர்கள் என பலர் பங்கேற்றார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்