வெள்ளவத்தை கடைத் தொகுதியில் பாரிய தீ விபத்து!

கொழும்பு, வெள்ளவத்தைப் பகுதியில் கடைத்தொகுதி ஒன்றில் சற்றுமுன்னர் தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

வெள்ளவத்தை, ஸ்ரேசன் வீதியை அண்மித்த பகுதியில் உள்ள புடவைக் கடைத் தொகுதியிலேயே இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தீயை அணைக்கும் முயற்சியில் பொலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தீ பரவலுக்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்