கிளிநொச்சியில் அக்கராஜ மன்னனின் நிகழ்விற்கு பொலிசாரால் தடை…

கிளிநொச்சியில் அக்கராஜ மன்னனின் நிகழ்விற்கு பொலிசாரால் தடை விதிக்கப்பட்டது. கிளிநொச்சி அக்கராஜன் பகுதியில் அமைக்கப்பட்ட அக்கராய மன்னனின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மன்னரை நினைவு கூரும் நிகழ்வொன்று இன்று கரைச்சி பிரதேச சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த நிகழ்வினை இன்று நடாத்துவதற்கு பொலிசார் தடை விதித்துள்ளனர். இந்த நிலையில் பொலிசாருடன் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் நீண்ட நேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டடிருந்தனர். எனினும் இன்று கரும்புலிகள் நாள் என்பதால் நிகழ்வை நடார்த்த முடியாது என தெரிவிக்கப்பட்டதை அடுத்து நிகழ்வு இடம்பெறவில்லை.
13ம் நூற்றாண்டில் பொலநறுவை ராசதானிக்கு பின்னர் வன்னி நிலம் தமிழ் அரசர்களால் ஆளப்பட்டது. அத்தகைய அரசர்களில் ஒருவரே அக்கஜய மன்னன். அவரது ஆட்சிக்குள்ளான பிரதேசத்தில் ஒன்றே அக்கராயன் என இன்று அழைக்கப்பட்டு வருகின்றது. அந்த மன்னனின் நினைவாக அப்பிரதேசத்தில் 05.07.2018 அன்று குறித்த சிலை திறந்து வைக்கப்பட்டிருந்தது. அந்த நாளை நினைவு கூரும் வகையில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தபோதே தடை விதிக்கப்பட்டது. இவ்வாறான நிலையில் குறித்த நிகழ்வு பொலிசாரின் தடையினால் கைவிடப்பட்டது.
இவ்விடயம் தொடர்பில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர்  அருணாசலம் வேழமாலிகிதன் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில்,
சகல திணைக்களங்களின் அனுமதிகள் பெறப்பட்டு குறித்த சிலை இவ்வாறன ஓர் நாளில் திறந்து வைக்கப்பட்டது. அந்தவகையில் மன்னர்களை வருடம் தோறும் நினைவுகூரும் செயற்பாடானது பிரதேச சபையின் வருடாந்த செயற்பாடுகளில் உள்ளடக்கப்பட்டிருந்தது. அவ்வாறு இன்று குறித்த நிகழ்விற்கு வருகை தந்தபோது பொலிசாரும், இராணுவத்தினரும் இணைந்து இந்த விழாவை செய்ய விடாது தடுத்து நிறுத்தியதுடன், நீதிமன்ற தடை உத்தரவையோ அல்லது பொலிஸ் அதிகாரத்தினடிப்படையில் எழுத்து மூலமான தடை உத்தரவொன்றின் ஊடாகவோ தடுத்து நிறுத்தாது மெது நிகழ்விற்கு தடை விதிக்கப்பட்டமையானது அரசியலமைப்பையும், பொலிசாருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மீறும் செயலாகவே நாங்கள் பார்க்கின்றோம். அதேவேளை சபையின் நடவடிக்கைகளை பறித்தெடுப்பதாகவும் பார்ப்பதாக அவர் தெரிவித்தார். குறித்த நிகழ்விற்கு பொலிசாரால் குறிப்பிடப்படுவது போன்று நினைத்து நாம் வரவில்லை. இதே நாளில் நிர்மானிக்கப்பட்ட மன்னரின் சிலைக்கு மாலை அணிவித்து நினைவு கூரவே நாங்கள் வந்திருந்தோம். பயங்கரவாத செயற்பாடுகள் போன்று அடையாளம் காட்டுவதற்கு முற்படுவது போன்றே அவர்களின் செயற்பாட்டை நாங்கள் பார்க்கின்றோம் எனவும் அவர் இதன்புாது தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.