வெள்ளவத்தையில் தீ விபத்து – சில வீதிகளுக்கு தற்காலிக பூட்டு

கொழும்புக்குள் பிரவேசிக்கும் காலி வீதியின் இராமகிருஷ்ணா சந்தியில் இருந்து டபிள்யூ.ஏ.சில்வா மாவத்தை சந்தி வரையான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

வெள்ளவத்தை – டபிள்யூ.ஏ.சில்வா மாவத்தையை அண்மித்த பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த தீ பரவலை கட்டுப்படுத்த தீயணைப்பு படையினருக்கு சொந்தமான 10 வாகனங்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த தீ பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.