மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணியில் சிரமதான பணிகள்

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் எதிர்வரும் 11ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், ஆலயத்தில் பல்வேறு சிரமதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கமைய இலங்கையில் மிகவும் பிரசித்திபெற்ற தீர்த்தக்கேணிகளில் ஒன்றாக கருதப்படும் மாமாங்கேஸ்வரர் தீர்த்தக்கேணி ஆலயத்தின் மஹோற்சவத்தினை முன்னிட்டு தூய்மைப்படுத்தும் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இலங்கை மின்சார சபையின் மட்டக்களப்பு மாவட்டத்தின் அலுவலகத்தின் ஏற்பாட்டில் இந்த சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த சிரமதான பணியில் மட்டக்களப்பு பிரதான மின்சாரசபை அலுவலக உத்தியோகத்தர்கள், களுவாஞ்சிகுடி, செங்கலடி, வாழைச்சேனை அலுவலகங்களின் உத்தியோகத்தர்கள், பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

எதிர்வரும் 11ஆம் திகதி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் ஆரம்பமாகி 20ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.