யாழில் வாகனங்கள் திருத்தும் நிலையத்தில் விபத்து: இளைஞன் சம்பவ இடத்தில் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம், நீர்வேலிப் பகுதியில் கனரக வாகனங்கள் திருத்தும் நிலையத்தில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளார்.

டிப்பர் வாகனம் பழுது பார்த்துக்கொண்டிருந்த குறித்த இளைஞன் மீது டிப்பர் வாகனத்தின் சுமைப்பெட்டி விழுந்ததில் அவர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்ற நிலையில், இச்சம்பவத்தில் சுமைப்பெட்டியை ‘ஜக்’ மூலம் தூக்கிவிட்டு அதன் கீழிருந்து பழுதுபார்த்துக் கொண்டிருந்தபோது ‘ஜக்’ நழுவி சுமைப்பெட்டி இளைஞன் மீது விழுந்துள்ளது.

இச்சம்பவத்தில் மானிப்பாய் பகுதியைச் சோ்ந்த இளைஞனே உயிரிழந்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்