தமிழ்த் தேசியக்கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் தொடர்பாக முக்கிய அறிவிப்பு

தமிழ்த் தேசியக்கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்கள், இம்மாத நடுப்பகுதியில் வெளியாகுமென தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு- கிழக்கில் போட்டியிடும் பிரதான மூன்று தமிழ்த்தேசியக் கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்களின் பணிகள், இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் பூர்த்தி செய்யப்படும் பணிகளே தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக அக்கட்சிகளின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனடிப்படையிலேயே இந்த கட்சிகளின் தேர்தல் விஞ்ஞாபனங்கள் இம்மாத நடுப்பகுதியில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.