யாழ்.மரியன்னை தேவாலய வளாகத்தினுள் சந்தேகத்திற்கிடமாக நடமாடியவர் கைது!

யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் இல்லத்திற்கு அண்மையாக உள்ள மரியன்னை தேவாலய (பெரிய கோயில்) வளாகத்தினுள் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கைது நடவடிக்கை இன்று(திங்கட்கிழமை) நண்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவர் தற்போது, தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மன்னார் பேசாலை தேவாலயத்தில் நேற்றுமுன்தினம் நடமாடிய மர்ம நபர் தொடர்பில் வடக்கு மாகாணம் முழுவதும் விசாரணைகள் முடக்கிவிடப்பட்ட நிலையில் இந்தச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.