ஐ.தே.க. மீண்டும் ஒரு வலுவான கட்சியாக உருவெடுக்கும் – நவீன்

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் ஒரு வலுவான கட்சியாக உருவெடுக்கும் என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

வலப்பன பகுதியில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், குறைபாடுகள் இருந்தாலும் யானையின் சின்னத்தை அழிக்க யாரும் அனுமதிக்க மாட்டார்கள் எனக் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சி எப்போதும் மக்களின் நலனுக்காக செயற்பட்டு வருவதாகவும், எனவே கட்சியைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் குறிப்பிட்டார்.

கட்சி வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் அனைத்து மக்களினதும் வாழ்க்கையை மேம்படுத்த ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ந்தும் செயற்படும் என நவீன் திசாநாயக்க தெரிவித்தார்.

மேலும் எதிர்வரும் பொதுத் தேர்தலில் உரிமையைப் பயன்படுத்தத் தவறினால் அது தற்போதைய திறமையற்ற அரசாங்கத்தை வலுப்படுத்த வழிவகுக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்