உண்மையான சுதந்திரக் கட்சியினர் ஜனாதிபதி கோட்டாவை சுற்றியுள்ளனர் – அமைச்சர் பிரசன்ன
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உண்மையான உறுப்பினர்கள் அனைவரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை சுற்றியுள்ளனர் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கணேமுல்ல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய அவர், சுதந்திரக் கட்சியில் எஞ்சியிருப்பவர்கள் கொள்கை அடிப்படையிலான அரசியல் இல்லாதவர்களின் குழு என்றும் கூறினார்.
சுதந்திரக் கட்சியில் இருக்கும்போது அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் என்று கூறிக்கொள்ளும் குழுவினரே கட்சியை அழித்தனர் என்றும் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இவ்வாறான செயற்பாடுகளே கட்சிக்குள் பிளவினை ஏற்படுத்தியது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
இதேவேளை ஜனாதிபதிக்கு வாக்களித்த 6.9 மில்லியன் மக்களில் பெரும்பான்மையினர் சுதந்திரக் கட்சியின் ஒரு தரப்பின் கொள்கைகளை ஆதரிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
மேலும் ஜனாதிபதி தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 861,000 வாக்குகளைப் பெற்றதாகவும், எதிர்வரும் பொதுத் தேர்தலில் குறைந்தது 900,000 வாக்குகளைப் பெறும் என்றும் அமைச்சர் கூறினார்.
கருத்துக்களேதுமில்லை