அக்கரைப்பற்று திகோ/ ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்…

அனைத்து பாடசாலைகளும் சுமார் மூன்று மாதங்களின் பின்னர் மாணவர்கள் இன்று 06/07/2020 பாடசாலைகளுக்கு சமூகமளித்தனர். கடந்த 29ஆம் திகதி பாடசாலைகள் யாவும் திறக்கப்பட்ட நிலையில் இன்று முதல் உயர்தரம் மற்றும் சாதாரண தரம் மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பாடசாலையின் முன்வாயிலில் சுகாதார நடைமுறைகள் தொடர்பான தகவல்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அத்தோடு பாடசாலையில் உள்நுழையும் மாணவர்கள் யாவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றியதை அவதானிக்க முடிந்தது.

இதற்கமைவாக இன்று காலை முதல் திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று திகோ/ ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலைக்கு மாணவர்கள் ஆர்வத்துடன் வருகைதந்திருந்தனர்

மாணவர்கள் யாவரும் முகக்கவசம் அணிந்திந்ததுடன் கைகளுவும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டனர். அத்தோடு மாணவர்களின் வெப்பநிலையினை கணிப்பிடும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது. இதேநேரம் அதிபர், ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்விசார பாடசாலை உத்தியோகத்தர்களும் ஊழியர்களும் பாடசாலைக்கு சமூகமளித்திருந்தனர்.

இந்நிலையில் அக்கரைப்பற்று திகோ/ ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலையில் மாணவர்களையும் ஆசிரியர்களையும் பாதுகாப்பதற்கான சிறப்பான சுகாதார ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் தனிமைப்படுத்தல் நிலையமும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய நாள் பெரும்பாலான மாணவர்கள் ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு சமூகமளித்திருந்த நிலையில் கற்றல் நடவடிக்கை ஆரம்பித்தல் தொடர்பிலும் பாடசாலை அதிபர் ஏ.சுமன் தலைமையில் கவனம் செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.