அமைச்சுக்களின் மேலதிக செயலாளர்கள் மற்றும் சிரேஷ்ட உதவி செயலாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு

அமைச்சுக்களின் மேலதிக செயலாளர்கள் மற்றும் சிரேஷ்ட உதவி செயலாளர்களை தேர்தல்கள் ஆணைக்குழுவில் முன்னலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அவர்களை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ள விஷேட கலந்துரைடலில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தல் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படும் இந்த காலத்தில் அரசாங்க சொத்துக்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக சில முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

விஷேடமான அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்கு சொந்தமான வாகனங்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் முறைபாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கே அமைச்சுக்களின் மேலதிக செயலாளர்கள் மற்றும் சிரேஷ்ட உதவி செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.