ஆயுதம்மூலம் தீர்iவினைப் பெறுவேன் என்று நான் ஒருபோதும் உறுதி தரேன்! இராஜதந்திரமே எனது வழி என்கிறார் சுமந்திரன்

ஆயுதம் ஏந்திப் போராடி தமிழ் மக்களின் உரிமைகளை வென்று தருவேன் என வாக்குத் தரவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கருத்து தெரிவித்த அவர், அஹிம்சை வழியில், இராஜதந்திரமாக, பேச்சுவார்த்தை மூலம் எவை எல்லாவற்றையும் பெறமுடியுமோ அவை எல்லாவற்றையும் பெற அயராது உழைப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

தொடர்ச்சியாக சமஷ்டியை எதிர்த்தவர்களும் கேலி செய்தவர்களும் இன்று அதை பெற்றுத்தருவதாக கூறுகின்றார்கள் என குறிப்பிட்ட சுமந்திரன், அவ்வாறு கூறியவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்துகொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றிற்கு கணிசமான சிங்கள மக்களது ஆதரவைப் பெற வேண்டியதன் அவசியம் குறித்து கருத்து தெரிவித்த அவர் பிரிக்கமுடியாத நாட்டுக்குள்ளேயே தீர்வை கோருவதாகவும் அவர் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.