முக்கிய சந்தேகநபரைக் கைது செய்ய மக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகரை கைது செய்வதற்கு உதவுமாறு பொலிஸார் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபராக இனங்காணப்பட்டுள்ள பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் குறித்து தற்போது விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

குறித்த பொலிஸ் பரிசோதகர் வெலிவேரிய பகுதியைச் சேர்ந்த வெஹெரவத்த கங்கானமலாகே வசந்த குமார எனும் 49 வயதுடைய ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், குறித்த சந்தேக நபரின் ஒளிப்படத்தை வெளியிட்டுள்ள பொலிஸ் ஊடகப் பிரிவு அவரை கைது செய்வதற்கு உதவுமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த நபர் தொடர்பாக தகவல் அறிந்தவர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய 0718591767, 0112422176 என்ற இலக்கங்களிற்கு அழைப்பு விடுத்து குறித்த பொலிஸ் அதிகாரி தொடர்பாக அறிவிக்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் தகவல் வழங்கும் நபர்களின் இரகசிய தன்மை பேணப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.