கோண்டாவிலில் இனந்தெரியாத கும்பலால் சமுர்த்தி உத்தியோகத்தரின் வீடு உடைப்பு

யாழ்ப்பாணம், கோண்டாவில் கிழக்கு ஞான வைரவர் ஒழுங்கையில் அமைந்துள்ள சமுர்த்தி உத்தியோகத்தரின் வீடு இனந்தெரியாதவர்களால் உடைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாகவும் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பலே இந்த தாக்குதலை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து அவர்கள் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.