சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட அரசியல் கைதி நிமலரூபனின் தாயாருக்கு வீடு வழங்கி வைப்பு …

வவுனியா சிறையச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் படுகொலை செய்யப்பட்ட அரசியல் கைதி நிமலரூபன் அவர்களின் தாயாருக்கு இன்று வீடு வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா சிறைச்சாலையிலிருந்து மகர சிறைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிறையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் சிறை காவலர்களின் தாக்குதலுக்குள்ளாகி கடந்த 2012 ஆம் ஆண்டு யூலை 4 ஆம் திகதி 2012 ஆம் ஆண்டு நிமலரூபன் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

8 வருடங்கள் கடந்த நிலையில் நெளுக்குளம் இளைஞர்களின் ஏற்பாட்டில் பல சவால்களுக்கு மத்தியில் அவனது கனவு இல்லம் பூர்த்தியாக்கப்பட்டு, நிமலரூபனின் நினைவு நாளை முன்னிட்டு அவரது தாயாரிடம் கையளிக்கப்பட்டது.

குறித்த தாயார் தனது அரை நிரந்தர வீட்டில் வசித்து வந்த நிலையில் நெளுக்குளம் இளைஞர்களின் முயற்சியால் 5 இலட்சம் ரூபாய் திரட்டப்பட்டு குறித்த வீடானது பூர்த்தி ஆக்கப்பட்டு தாயாரிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் நிமலரூபனின் நெளுக்குளம் நண்பர்கள், உறவினர்கள், அயலவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.