ரவி கருணாநாயக்க உள்ளிட்ட அறுவருக்கு எதிரான பிடியாணைக்கு இடைக்கால தடை

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவை நடைமுறைப்படுத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான ஏ.எச்.எம் நவாஸ், ஷிரான் குணரத்ன மற்றும் சோஹித ராஜகருணா ஆகியோரின் முன்னிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) ரவி கருணாநாயக்க தக்க செய்த ரிட் மனு விசாரணைக்கு வந்தபோதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு மீதான விசாரணைகள் முடிவடையும் வரையில் இவ்வாறு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவின் அடிப்படையில் மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு எவ்வித இடையூறும் இல்லை என மூவரடங்கிய நீதிபதிகள் குழுவின் தலைவர் நீதிபதி நவாஸ் தெரிவித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு மத்திய வங்கி முறிகள் ஏலங்களில் 52 பில்லியனுக்கும் அதிகமான அரசு நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் முறிகள் மோசடி தொடர்பில் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.