திகாமடுல்லையின் முதன்மை வேட்பாளர் கோடீஸ்வரனே- தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் பொதுச் செயலாளர் துரைராசிங்கம் என்பவர்கள் உறுதிப்படுத்தினார்…

கடந்த இரு நாட்களாக இனம் தெரியாத முகநுால் கணக்கில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அல்ல அவர் தான் முதன்மை வேட்பாளர்   என்று பொய்யுரைக்கின்றார் என்ற செய்தி வெளியாகியிருந்தது.

இது தொடர்பிர் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராஜா, பொதுச் செயலாளர் கி.துரைராசிங்கம் அவர்களுடன் Tamilcnn ஊடகப்பிரிவு இது தொடர்பாக வினாவியபோது  இது முற்றிலும் உண்மைக்குப்புறம்பான செய்தி என்றும் திகாமடுல்ல மாவட்டத்தின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் என்றும் தெரிவித்தார்கள்.

வேட்பு மனுக்களில் முதன்மை வேட்பாளர் என்று பெயரிடப்படுபவர்களே முதன்மை வேட்பாளர்கள் திகமடுல்ல மாவட்டத்தின் தமிழரசுக்கட்டசி வேட்பு மனுவில் இவரது பெயரே உள்ள. எனவே இது முற்றிலும் உண்மை பொய் செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் , திகாமடுல்ல மாவட்டத்தில் தமிழர் பிரதிநிதித்துவம் யாரும் வர கூடாது என்பதற்காக பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர் அதில் ஒன்றுதான் இது என்றும் குறிப்பிட்டார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.