கிளிநொச்சி வெடிவிபத்தில் படுகாயமடைந்த முன்னாள் போராளி உயிரிழப்பு

கிளிநொச்சி – இயக்கச்சி பகுதியில் நாட்டு வெடிபொருள் தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் படுகாயமடைந்த முன்னாள் போராளி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

அவர் அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று (புதன்கிழமை) அதிகாலை உயிரிழந்தார் என பளை பொலிஸார் தெரிவித்தனர்.

இயக்கச்சியைச் சேர்ந்த தங்கராசா தேவதாசன் (வயது-43) என்ற முன்னாள் போராளியே இவ்வாறு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த 3ஆம் திகதி மீன் ரின்னுக்குள் சி4 வெடிமருந்தைப் பயன்படுத்தி நாட்டு வெடிபொருள் தயாரித்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி இவர் காயமடைந்திருந்தார்.

இதனையடுத்து, படுகாயமடைந்த அவர், கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அங்கு சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலையே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

குறித்த வெடிப்புச் சம்பவத்தையடுத்து, அவரது மனைவி உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். அதேவேளை, முன்னாள் போராளிகள் பலர் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.