மட்டக்களப்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பு பல்முனை பிரச்சாரம்!..

மட்டுநகர் பகுதியில் இன்றைய தினம் (07/07/2020) தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நான்காம் கட்ட பொது தேர்தல் பிரச்சாரம் முன்னெடுக்கப்படரடன.

நேற்றைய தினம் இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரம் திக்கோடை பகுதியில் மேற்கொள்ளப்பட்டன.

எதிர்வரும் ஆகஷ்ட் 5,ம் திகதி இடம்பெற இருக்கும் பொதுத்தேர்தலில் வீட்டு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கோடு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பா.அரியநேத்திரன்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா,மட்டு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவான், மாநகரசபை உறுப்பினர் வே.தவராஜா, பட்டிருப்பு தொகுதி பொருலாளர் த.நடராசா, வாலிபமுன்னணி உறுப்பினர்கள்,மகளிர் அணி உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டு  இந்த தேர்தல் பிரசார பணியை மேற்கொண்டனர்.
மட்டுநகர் கடைத்தொகுதி, பேரூந்து நிலையம், பொதுச்சந்தை உட்பட நகர்புறங்களில் பரவலாக பிரசாரங்கள் முன்எடுக்கப்பட்டன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.