கைது செய்யப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு விளக்கமறியல்
கைது செய்யப்பட்ட பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 13 அதிகாரிகளையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த நபர்களை இன்று (புதன்கிழமை) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய அவர்களை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தேகநபர்களில் நேற்றைய தினம் கைதான பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் அடங்குவதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் 18 அதிகாரிகள் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை