கிழக்கின் தொல்லியல் செயலணிக்கு தமிழர் இருவரை பரிந்துரைக்குமாறு டக்ளஸ் தேவானந்தாவுக்கு ஜனாதிபதி பணிப்பு

கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் சின்னங்களைப் பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதற்காக இருவரை பரிந்துரைக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

குறித்த கிழக்கு தொல்பொருள் செயலணியில் சிறுபான்மையினர் யாரும் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என்பது பெரும் சர்ச்சையாக உருவெடுத்திருந்தது.

இதனைச் சுட்டிக்காட்டி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இந்தக் கடிதத்திற்கு பதிலளித்திருந்த ஜனாதிபதி இரு சிறுபான்மையினரை இணைத்துக்கொள்வதற்கு இணக்கம் தெரிவித்திருந்தார்.

எனினும், கிழக்கு மாகாண தொல்பொருள் செயலணியில் ஏற்கனவே தெரிவுசெய்யப்பட்டிருந்த உறுப்பினர்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியாகியிருந்தது.

இவ்விடயம் குறித்து டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியின் கவனத்திற்கு இன்று கொண்டுசென்ற நிலையில் சிறுபான்மையினர் தரப்பில் பிரதிநிதிகள் இருவரை பரிந்துரை செய்துதருமாறு ஜனாதிபதி கோட்பய ராஜபக்ஷ அமைச்சரிடம் பணிப்புரை விடுத்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.