மாமாங்கேஸ்வரர் உற்சவத்தில் ஒரே நேரத்தில் பங்கேற்க 50 பேருக்கு அனுமதி!
மட்டக்களப்பு, அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் கோவில் வருடாந்த மகோற்சவம், எதிர்வரும் சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, இம்மாதம் 20ஆம் திகதி ஆடி அமாவாசை தீர்த்ததுடன் நிறைவு பெறவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் உள்ள நிலையில், சுகாதாரத் திணைக்களத்தின் ஆலோசனைக்கிணங்க கோவிலுக்குள் ஒரு தடவையில் 50 பக்தர்கள் உள்வாங்கப்படவுள்ளனர்.
அவர்கள் தங்கள் நேர்த்திகளை நிறைவேற்றி வெளிச் சென்ற பின்பு அடுத்த 50 பக்தர்கள் கிரமமாக உள்வாங்கப்படவுள்ளனர் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதைக் கருத்தில்கொண்டு பக்தர்கள் தங்களுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென நிர்வாகம் மேலும் அறிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை