பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தல் கூட்டம்!

எதிர்வரும் பொதுத்தேர்தலில் எவ்வாறு சுகாதார நடைமுறையுடன்  கொரோனா வைரஸ் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாப்பு பெறுவது தொடர்பிலான அறிவுறுத்தல் கூட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது.

இக்கூட்டமானது கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சுற்றாடல் பாதுகாப்பு பொறுப்பதிகாரி எஸ்.எல் சம்சுதீன் தலைமையில் இடம்பெற்றதுடன் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.பி.இந்திக்க உதயங்கர கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி  வைத்தியர் எம்.எச். றிஸ்வின் ஆகியோர் கலந்து கொண்டு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை கொவிட் 19 அச்சுறுத்தலில் இருந்து எவ்வாறு தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுப்பது தொடர்பில் பல்வேறு விளக்கங்களை வழங்கினர்.

இதன் போது அங்கு கருத்து தெரிவித்த கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ”தேர்தல் காலங்களில் வேட்பாளர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் மக்களுக்கும் வேட்பாளர்களுக்கும் இடையே சமூக இடைவெளி பேணல் தேர்தல் கூட்டங்களை எவ்வாறு ஒழுங்கு படுத்துவது கைகளை கழுவுவதற்கான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்,முகக்கவசம் அணிதலின் அவசியம் குறித்தும் கூட்டத்திற்கு வருகை தந்திருந்த வேட்பாளர்களை அறிவுறுத்தினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.