இலங்கையில் மேலும் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

இலங்கையில் மேலும் 57 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த வெலிக்கட சிறைச்சாலை கைதிகள் மற்றும் ஊழியர்கள் என 450 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 56 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, மாரவில பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.

கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் ஆலோசகராகப் பணியாற்றும் பெண் ஒருவருக்கே இவ்வாறு வைரஸ் தொற்றுக்கு கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் மொத்தம் 57 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 151 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், இதுவரை 1979 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இன்னும் 161 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.