மாரவில பிரதேசத்தில் 45 பேர் சுய தனிமைப்படுத்தலில்

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் ஆலோசகராக சேவையாற்றிய பெண் ஒருவர் மாரவில பிரதேசத்தில், விடுமுறைக்காக வீடு திரும்பியிருந்த நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது நேற்று அடையாளம் காணப்பட்டது.

இதனையடுத்து இவருடன் தொடர்புடையவர்கள் தொடர்ச்சியாக பி.சி.ஆர். பரிசோதனையை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தது.

அந்தவகையில் குறித்த பெண் ஆலோசகர்களின் குடும்பமும் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு குறித்த பெண்ணுடன் நெருக்கமான உறவை பேணிய 10 குடும்பங்களைச் சேர்ந்த 45 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த பணிக்கப்பட்டுள்ளனர்.

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இருந்த 56 கைதிகள் மற்றும் ஆலோசகர் ஒருவர் உட்பட 57 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.