தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கு வாக்களித்தால் மாத்திரமே சிறுபான்மை சமூகம் நிம்மதியாக வாழலாம்
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்தால் மாத்திரமே சிறுபான்மை சமூகம் நிம்மதியாக வாழக்கூடிய நிலைமை உருவாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் சட்டத்தரணி ந.கமலதாசன் தெரிவித்தார்.
வாழைச்சேனை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்-
தற்போது நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல கட்சிகளில் பலர் போட்டியிடுகின்றனர். ஆனால் இவற்றில் பெரும்பாலான கட்சிகள் பெரும்பன்மை சமூகத்தின் ஆதரவு கட்சிகளாகவே காணப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் மக்கள் தங்களுடைய வாக்குகளை வீண் விரயம் செய்யாது. அனைவரும் வாக்களிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக தமிழ் மக்கள் தமிழர்களுக்கு மாத்திரம் வாக்களிக்க வேண்டுமே தவிர மாற்று இன கட்சிகளுக்கு வாக்களிப்பது எமது உணர்வுகளை நாமே குளிதோண்டி புதைப்பதற்கு ஒப்பானது.
தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்காமல் விட்டாமல் சர்வதேசத்தில் தமிழர்களுக்கு எந்தவித பிரச்சனைகளும் இல்லை என்பதை வெளிக்கொண்டு வரும். இந்த சமயத்தில் பெரும்பான்மை சமூகத்தினரால் நமது அபிலாசைகள் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டு விடும். இந்த தவறை நாம் செய்ய வேண்டாம். மாறாக வேறு கட்சிகளுக்கு அழிக்கப்படும் வாக்குகள் ஆசனத்தினை பெறாமல் வீணாக அழிக்கப்பட்ட வாக்குகளாகவே மாறக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுகின்றது.
எனவே இளைஞர்களின் போராட்டத்தினை கொச்சைப்படுத்தாமல் எமது இனத்தின் உரிமைகளை வென்றெடுத்து தமிழ் பகுதியில் தமிழ் கட்சியே ஆளக்கூடிய நிலையில் நாங்கள் செயற்பட வேண்டும். அந்தவிடயத்தில் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இம்முறை அதிக வாக்குகளை அழிக்க வேண்டும். இல்லையேல் எமது தலையெழுத்தினை யாராலும் மாற்ற முடியாது.
இம்முறை பலர் தமிழ் மக்களின் வாக்குகளை காட்டி தங்களது அபிலாசைகளை நிறைவேற்றும் பொருட்டு களமிறங்கியுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களித்தால் மாத்திரம் சிறுபான்மை சமூகம் நிம்மதியாக வாழ முடியும். இல்லையேல் மற்றைய கட்சிகளுக்கு வாக்களித்தால் நாம் முன்னர் அனுபவித்த கஷ்டங்களை மீண்டும் அனுபவிக்க நேரிடும்.
இவர்கள் இது நமது கட்சி, பெரும்பான்மையினரின் கட்சி அல்ல என்று பலர் தற்போது கூறுவார்கள். பின்னர் வெற்றி பெற்றால் தமமு தமிழினத்தினை அடக்கிய கட்சியுடன் சேர்ந்து தமிழர்களை மீண்டும் அடக்க இவர்களே வழிவசமைத்துக் கொடுப்பார்கள். இந்த விடயத்தில் எமது தமிழ் மக்கள் சற்று விழிப்பாக இருக்க வேண்டும் என்றார்.
கருத்துக்களேதுமில்லை