அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் 4 மாதங்கள் நீடிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.
அதன்படி, எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதி வரையில் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நீடிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற அரசியல் பழிலாங்கல்கள் தொடர்பாக ஆராய்வதற்காக 2020 ஜனவரி மாதம் 22 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் குறித்த ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டது.
குறித்த ஆணைக்குழுவின் பதவிக் காலம் எதிர்வரும் 16 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில் குறித்த காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆணைக்குழுவில் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன தலைமை வகிக்கின்றார் என்பதுடன் உறுப்பினர்களில் ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி தயா சந்திரசிறி ஜெயதிலக மற்றும் ஓய்வுபெற்ற பொலிஸ் ஆய்வாளர் சந்திர பெர்னாண்டோ ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இடம்பெற்றுவரும் விசாரணைகள் நிறைவடையாதுள்ளமை காரணமாக, அதன் அதிகார காலத்தை நீடிக்குமாறு ஜனாதிபதியிடம் உபாலி அபேரத்ன கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை