ரஷ்யாவில் இருந்து 266 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்
ரஷ்யாவில் இருந்து 266 இலங்கையர்கள், இன்று (வெள்ளிக்கிழமை) காலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.
குறித்த 266 இலங்கையர்களும், சிறப்பு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று காலை வந்தடைந்தனர்.
இவ்வாறு வருகை தந்த அனைவருக்கும், பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவில் இருந்து நாட்டை வந்தடைந்தவர்களில் பெரும்பாலோர், உயர்கல்விக்காக சென்ற இலங்கை மாணவர்களாவர்.
இதேவேளை ஜப்பானில் இருந்தும் 5 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை