சிறைக்கைதிகள் தங்குமிடத்தில் 12 கையடக்க தொலைபேசிகள் கண்டுபிடிப்பு

நீர்கொழும்பு சிறைக்கைதிகளின் விடுதிக்கு அருகிலுள்ள கழிவுநீர் வாய்க்காலில் இருந்து 12 கையடக்க தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த  கழிவுநீர் வாய்க்காலினை சுத்தப்படுத்தும்போதே குறித்த கையடக்க தொலைப்பேசிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனைத் தொடர்ந்து, சிறைச்சாலை ஆணையாளர் ஜெனரல் துஷார உபுல்தெனிய, சிறைசாலையின் அனைத்து பகுதிகளையும் சோதனைக்கு உட்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதனடிப்படையில் சிறைச்சாலையில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை சிறைச்சாலையில் தொடர்ச்சியாக சோதனைகள் நடத்தப்படுவதால்,  அதில் சேவை செய்யும் அதிகாரி ஒருவர், கையடக்க தொலைபேசியை கழிவுநீர் வாய்க்காலில் வீசியதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

குறித்த அதிகாரி, கைதியொருவருக்கு கையடக்க தொலைபேசியை வழங்குவதற்காக எடுத்து வந்திருக்கலாமெனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.