இலங்கையில் மேலும் 3பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் தொற்று தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2454 ஆக  உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கந்தகாடு மத்திய நிலையத்திலுள்ள மூன்று பேருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் மாத்திரம் 300 பேர் அடையாளம் காணப்பட்டதாக கூறப்படுகின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்