மொரட்டுவையில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணம்

மொரட்டுவ- லுனாவை பகுதியில் பொலிஸாரின் கடமைக்கு, இடையூறு  விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 39 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக பொலிஸாரின் ஊடக பிரிவின் தகவல்கள் மேலும் தெரிவிப்பதாவது, லுனாவை பகுதியில் வாகனங்களை சோதனையிடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டிருந்துள்ளனர்.

இதன்போது, வீதிச்சோதனை சாவடியில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு முச்சக்கரவண்டிகளை பொலிஸார் சோதனையிட்டபோது, அதிலிருந்த மூவர் பொலிஸார் மீது தாக்குதலை மேற்கொண்டனர்.

அத்துடன் குறித்த சந்தேகநபர்கள் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டு, பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தனர்.

இதன்போதே பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சந்தேகநபர்கள் மீது, துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டதில் அதில் ஒருவர் காயமடைந்தார்.

இந்நிலையில் காயமடைந்தவரை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்தப்போதே அவர் உயிரிழந்தார்” என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்