நாட்டில் ஜனநாயக சூழலை ஐ.தே.க.தான் ஏற்படுத்தியது- விஜயகலா

நாட்டில் ஜனநாயக சூழலை ஐக்கிய தேசியக்கட்சித்தான் ஏற்படுத்தியதென அக்கட்சியின் முதன்மை வேட்பாளர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நெடுந்தீவில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் விஜயகலா மகேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளதாவது, “கடந்த 20 வருடங்களுக்கு மேலாக யாழ்ப்பாணத்தின் தீவுப்பகுதிகள் அனைத்திலும் ஜனநாயகமற்ற பதற்றமான சூழ்நிலையிலேயே மக்கள் வாழ்ந்து வந்தனர்.

எனினும் நல்லாட்சி அரசாங்கத்தின் ஊடாகவே தீவுப்பகுதியில் ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது. தற்போது மக்கள் எந்தவித அச்சுறுத்தலும் இன்றி கெடுபிடிகள் இன்றி சுதந்திரமாக வாழ்ந்து வருகிறார்கள்.

அந்தவகையில் தீவுப்பகுதி மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிப்பதன் ஊடாகவே ஜனநாயகமான சூழல் மீள உருவாக்கப்படும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.